செய்திகள்

தஞ்சையில் லாரி மீது மினிலாரி மோதி விபத்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-03-18 18:05 IST   |   Update On 2019-03-18 18:05:00 IST
தஞ்சையில் லாரி மீது காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த மினிலாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:

திருச்சியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி திருத்துறைப்பூண்டி நோக்கி புறப்பட்டது. அந்த மினி லாரி இன்று அதிகாலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மினிலாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் சென்று மினிலாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News