செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 2,600 பெண்களுக்கு நாட்டுக்கோழிகள்- கலெக்டர் தகவல்

Published On 2019-03-09 12:12 GMT   |   Update On 2019-03-09 12:12 GMT
திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் திருப்பூர், அவினாசி, பல்லடம், பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் உடுமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்து 600 கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதன்படி ஒரு பெண்ணுக்கு, 4 வார வயதுடைய 25 சேவல், 25 பெட்டை கோழி என 50 கோழிகள் உள்பட ரூ.1 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News