செய்திகள்
பேரணாம்பட்டு மலட்டாற்றில் மணல் கடத்தலை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மதினாபல்லி மலட்டாற்றில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி மலட்டாறானது பேரணாம்பட்டு , ஆம்பூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மதினாப்பல்லி ஆற்றுப்படுகையை நம்பியுள்ளன.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இரவும், பகலும் மணல் சுமார் 10 அடி முதல் 15 அடி வரை தோண்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் சுற்றுப்புற நகரங்களுக்கும் கடத்தப்பட்டு வருகிறது.
இதனால் குடிநீர் பைப்லைன்கள் வெளியில் தெரியும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட அமைப்பாளர் ராம்தாஸ், மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர் வெங்கடபதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேணுமூர்த்தி, நிர்வாகிகள் பழனி, சந்திரன், ராஜா, நந்தன், சசி, ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணல் கடத்தலை உடனடியாக தடுக்க கோரி மலட்டாற்றில் நின்று கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.