செய்திகள்

வேங்கிக்காலில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல் - பெண் படுகாயம்

Published On 2019-02-25 22:10 IST   |   Update On 2019-02-25 22:10:00 IST
வேங்கிக்காலில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஓம்சக்தி நகரில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் திடீரென மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் மற்றும் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் ஆட்டோவின் கண்ணாடி உடைந்தது. மேலும் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News