செய்திகள்
அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது
அதியமான்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:
அதியமான்கோட்டை போலீசாருக்கு அரசுக்கு புறம்பாக மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமா என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று பென்னாகரம் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியா மற்றும் கணேசன் என்பவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.