செய்திகள்

உயர் அதிகாரியின் தொந்தரவால் கால்நடை டாக்டர் தற்கொலை - தந்தை போலீசில் புகார்

Published On 2019-02-07 12:57 IST   |   Update On 2019-02-07 12:57:00 IST
பள்ளிப்பட்டு அருகே உயர் அதிகாரியின் தொந்தரவால் கால்நடை டாக்டர் தற்கொலை செய்துள்ளதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பள்ளிப்பட்டு:

ஆர்.கே.நகர் பேட்டையை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்தவர். ராமச்சந்திரன் இவரது மகன் சிவா (வயது 28). கால்நடை டாக்டர்.

இவர் பள்ளிப்பட்டை அடுத்த பாலாபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டாக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

சிவாவுக்கு உயர் அதிகாரிகளின் தொந்தரவு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி மனவேதனை அடைந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சிவா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி துடித்தனர். இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சிவாவின் தற்கொலையில் உயர் அதிகாரியின் தொந்தரவு இருப்பதாக அவரது தந்தை ராமச்சந்திரன் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். அதில் கால்நடை உயர் அதிகாரி ஒருவரது பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார். உயர் அதிகாரியின் தொந்தரவால் கால்நடை டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News