செய்திகள்

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகம்- 15 பேர் கைது

Published On 2019-01-14 16:53 GMT   |   Update On 2019-01-14 16:53 GMT
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகள், மார்க்கெட்டுகளில் குவிந்துள்ளனர். இதேபோல் பஸ், ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஒரு கும்பல் படு ஜோராக ஈடுபடுகிறது. இது குறித்து மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிகள் குறித்து விசாரித்து வந்தனர்.

அப்போது திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கே.கே.நகர், அரியமங்கலம், திருவானைக்காவல், பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், பெரியகடை வீதி, உய்யக்கொண்டான்  திருமலை, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆங்காங்கே பொருட்கள் வாங்குவது போல் பொதுமக்கள் வேடத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேர் என மொத்தம் 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

 திருவானைக்காவல் சரவணன் (45), உறையூர் ராம கிருஷ்ணன் (54), குமார் (29), பாண்டமங்கலம் ஹித யத் உசேன் (54), உய்யக்கொண்டான் திருமலை மணிகண்டன் (25), ஆர்.எம்.எஸ்.காலனி தினகரன் (62), அரியமங்கலம் சீனிவாச நகர் முத்துமணி (28), மதியழகன் (65), காட்டூர் ரவி (40), சங்கிலியாண்டபுரம் இளையராஜா (35), குமார் (32), காந்தி மார்க்கெட் மன்னர் பிள்ளை தெரு செந்தில்குமார் (38), பாலக்கரை திருமூர்த்தி (27), முகமது உசேன் (40) ஆகியோர் ஆவர். மேலும் சாகின்ஷா, பாண்டியன், நடராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News