செய்திகள்

அரியலூரில் நாளை அம்மா திட்ட முகாம்

Published On 2019-01-03 20:21 IST   |   Update On 2019-01-03 20:21:00 IST
அரியலூரில் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6-வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில்    சூரியமணல், வாழைக்குறிச்சி ஆகியகிராமங்களிலும், ஆண்டி மடம் வட்டத்தில் அய்யூர் கிராமத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News