செய்திகள்

மதுரையில் 16 வயது சிறுமிக்கு திருமணம்- தாய் உள்பட 5 பேர் கைது

Published On 2018-12-28 16:05 IST   |   Update On 2018-12-28 16:05:00 IST
மதுரையில் குழந்தை திருமணம் புகாரில் தாய் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது39). இவரது மகள் கயல்விழி (16). பழனிச்சாமி இறந்து விட்ட நிலையில் கடந்த 12-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (28) என்பவருக்கும் கயல் விழிக்கும் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அதிகாரி ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. குழந்தை திருமணம் குறித்து மதுரை அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணவேணி, ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை சுப்பிரமணியன், தாய் விஜயலட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் கண்ணன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News