செய்திகள்

பொன் மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை- போலீஸ் அதிகாரிகள் புகார்

Published On 2018-12-19 09:05 GMT   |   Update On 2018-12-19 09:29 GMT
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று அவரது தலைமையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மீண்டும் புகார் தெரிவித்துள்ளனர். #IdolWing #PonManickavel
சென்னை:

பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இன்று மேலும் சில அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் சூப்பிரெண்டு இளங்கோ, அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.



“தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் பொன் மாணிக்கவேல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தான் சுட்டிக்காட்டும் நபர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என அவர் சொல்கிறார். காணாமல் போன சிலைகளில் பலவற்றை மீட்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. ஆனால் கைது செய்ய நிர்பந்திக்கிறார். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் இளங்கோ. #IdolWing #PonManickavel

Tags:    

Similar News