செய்திகள்

மேகமலையில் தந்தத்திற்காக யானைகள் கொலை

Published On 2018-12-15 11:20 GMT   |   Update On 2018-12-15 11:20 GMT
மேகமலையில் தந்தத்திற்காக யானைகள் கொலை செய்யப்பட்டதா? என்று வன உயிரின கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதியில் உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 5 யானைகள் ஒரே இடத்தில் பலியாகின. இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. யானைகள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வனத்துறையினர் மற்றும் மின்சாரத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேகமலை வன உயிரின சரணாலயத்தில் அடிக்கடி யானைகள் உயிரிழப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக வண்ணாத்திப்பாறை பகுதியில் வன உயிரின ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த யானையின் தந்தத்தை விற்க முயன்றபோது 2 பேர் பிடிபட்டனர். இதனால் சரணாலய பகுதியில் யானைகள் உயிரிழப்பது இயற்கையாகவா? அல்லது கொலை செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.

மேகமலை வனப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியது. இதுவரை மின்சாரம் தாக்கி யானைகள் பலியானதே கிடையாது. 2 யானைகள் உயிரிழந்து இதுவே முதல்முறை.

எனவே தந்தத்தை வேட்டையாடுவதற்காக யானைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து மாநில கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் லிமோட்டசி தலைமையில் வன உயிரின அதிகாரிகள், மேகமலை வன காப்பாளர் கலாநிதி, வன பாதுகாவலர் புவனேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இக்குழுவினர் வண்ணாத்திப்பாறையில் யானை இறந்து கிடந்த இடத்தையும் ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வனப்பகுதியில் அடிக்கடி நடமாடும் நபர்களை விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர். விரைவில் இதில் உண்மை வெளிவரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News