செய்திகள்

டெல்லி இளம்பெண் கற்பழிப்பு- கும்பகோணம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2018-12-06 12:17 GMT   |   Update On 2018-12-06 12:17 GMT
கும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

கும்பகோணத்திற்கு கடந்த 2-ந்தேதி நள்ளிரவு டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் வங்கி பணிக்காக வந்திருந்தார். அந்த பெண் வழிதெரியாமல் நின்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வசந்த், தினேஷ், அன்பரசன், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி பெண், கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இன்று வக்கீல்கள், பாதிக்கப்பட்ட டெல்லி பெண்ணிற்கு ஆதரவாக கோர்ட்டு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாதர் சங்கத்தினரும், பல்வேறு அமைப்பினரும் குற்றவாளிகளுக்கு தகுந்த நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News