செய்திகள்

ஓட்டேரியில் சிறுவன் கடத்தலில் மேலும் ஒரு பெண் கைது

Published On 2018-11-01 15:15 IST   |   Update On 2018-11-01 15:15:00 IST
ஓட்டேரியில் சிறுவன் கடத்தலில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

புளியந்தோப்பு போகி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி துர்காதேவி. இவர்களது 3 வயது மகன் அஜய். மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறான்.

கடந்த 29-ந்தேதி பள்ளியில் இருந்த சிறுவன் அஜயை 2 பெண்கள் உறவினர்கள் என்று கூறி அழைத்து சென்றனர். அதன்பின் அவர்கள் சிறுவனை கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது. பள்ளி அருகே கண்காணிப்பு கேமராவில் 2 பெண்கள் உருவம் பதிவாகி இருந்தது.

அதை வைத்து விசாரணை நடத்திய போலீசார், வியாசர்பாடி கணேசபுரத்தை சேர்ந்த குட்டியம்மா, அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சிறுவனை கடத்தியது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். சிறுவன் அஜயை மீட்டனர்.

விசாரணையில், ஓட்டேரியை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாக குட்டியம்மா விடம் கூறினார். அதனால் குட்டியம்மா, ஐஸ்வர்யா ஆகியோர் சிறுவனை கடத்தி சென்று தத்து கொடுத்து பணம் வாங்க முடிவு செய்தது தெரிந்தது.

இந்த நிலையில், சிறுவனை பணம் கொடுத்து வாங்க முயன்றதாக ஓட்டேரியை சேர்ந்த ஜோதியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News