செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2018-10-05 09:31 GMT   |   Update On 2018-10-05 10:36 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சார்ந்துள்ளன.

தற்போது வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ராஜபாளையம் தாலுகாவில் உள்ள சாஸ்தா கோவில் ஆற்றுப்படுகைகளிலும், அய்யனார் கோவில் ஆற்றுப்படுகைகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆற்றுப் பகுதியிலும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.

எனவே பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விருதுநகர் கலெக்டரும், பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News