செய்திகள்

மதுரை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

Published On 2018-10-01 15:46 IST   |   Update On 2018-10-01 15:46:00 IST
மதுரை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள சிந்தாமணி ரோட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கரன் (54) என்பவர் மிட்டாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரின் வன்மத்தை அறியாத அந்த சிறுமியும் பாஸ்கரனுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு பாஸ்கரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த சிறுமி அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாயார் மகளிடம் விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News