செய்திகள்

மதுரையை கலக்கிய பிரபல கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2018-09-27 15:50 IST   |   Update On 2018-09-27 15:50:00 IST
மதுரையை கலக்கிய பிரபல கொள்ளையனை மடக்கி பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
வத்தலக்குண்டு:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 30). இவர் மீது மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் பிடிவாரண்ட் குற்றவாளியும் ஆவார்.

அருண்பாண்டியன் மீது, வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் தாதபட்டி சின்னையா என்பவரிடம் செல்போனை பறித்து சென்ற வழக்கு உள்ளது.

இந்த வழக்கிற்காக வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருண்பாண்டியன் வாடிப்பட்டியில் பதுங்கி உள்ள ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வத்தலக்குண்டு போலீசார் தப்பி ஓட முயன்ற அருண்பாண்டியனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அருண்பாண்டியனை பிடித்த வத்தலக்குண்டு போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Tags:    

Similar News