செய்திகள்

திண்டுக்கல்லில் தரமற்ற உணவு சாப்பிட்ட 10 பேர் மயக்கம்

Published On 2018-09-26 15:30 IST   |   Update On 2018-09-26 15:30:00 IST
திண்டுக்கல்லில் தரமற்ற உணவு சாப்பிட்ட 10 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பகுதியில் தனியார் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் கும்பகோணத்தைச் சேர்ந்த சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரெட்டியபட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து தினசரி உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காலை உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மேலும் அவர்கள் உடல்நிலை பாதிப்படைந்தது.

உடனே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பாலா (வயது 19), கோபி (19), கணேஷ் (19), மணி (28), இர்வின் (25), திவான் (18), ரவி (20), அய்யப்பன் (24) உள்பட 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் சாப்பிட்ட உணவு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உணவின் தரத்தை சுகா தாரத்துறை அலுவலர் கள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News