செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 5 பேர் கைது

Published On 2018-09-21 10:06 GMT   |   Update On 2018-09-21 10:06 GMT
புதுவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. எனவே இதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலம் மிட்டுக் கொண்டிருப்பதாக அதிரடிபடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கோரிமேடு போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கே.வி.கே. பண்ணை அருகே சிலர் அமர்ந்து இருந்து கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதானவர்கள் தட்டாஞ்சாவடியை சேர்ந்த முகமது ரபிக் (வயது 19), ஜீவானந்த புரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), சண்முகாரத்தை சேர்ந்த அய்யனார் (18), முத்திரையர் பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (21) மற்றும் வில்லியனூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது.

சிறுவனைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவுக்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்ததாகவும், பின்னர் அவற்றை பொட்டலமாக தயாரித்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்றதாகவும் கூறினார்கள்.

Tags:    

Similar News