செய்திகள்

42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயரவில்லை

Published On 2018-09-19 20:17 GMT   |   Update On 2018-09-19 20:17 GMT
42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர். #PetrolDiesel #PetrolPriceHike
சென்னை:

கடந்த மாதத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 41 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

இதில் திடீர் திருப்பமாக நேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாள் விலையிலேயே நேற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை ஆனது. கடைசியாக கடந்த மாதம் 8-ந் தேதி பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்தது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.  #PetrolDiesel #PetrolPriceHike
Tags:    

Similar News