செய்திகள்

பால் அதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

Published On 2018-09-14 06:16 GMT   |   Update On 2018-09-14 06:16 GMT
பால் அதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். #MoneyRobbery
சென்னை:

ஈரோட்டை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர் அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு கும்பல் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக கூறியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 16-ந்தேதி கடன் தருவதாக அழைத்து வரப்பட்டு அவரிடம் இருந்த ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையில் தொழில் அதிபருக்கு கடன் வாங்கித் தருவதாக அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தது 5 பேர் என தெரியவந்தது.

இந்த வழக்கில் திருத்தணியை சேர்ந்த ஜெயக்குமார், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ரசூல்கான் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சமும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கோபி என்பவரை நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #MoneyRobbery

Tags:    

Similar News