செய்திகள்

எட்டயபுரத்தில் விவசாயிகள் சாலைமறியல் - 102 பேர் கைது

Published On 2018-09-05 17:53 GMT   |   Update On 2018-09-05 17:53 GMT
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி நேற்று எட்டயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 102 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் கடந்த 2016-2017-ம் ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை செயலாளர் கனகராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெபராஜ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, தாசில்தார் வதனாள், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் கவிதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் சாலைமறியலை கைவிடவில்லை.

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News