செய்திகள்

எலிக்காய்ச்சல் பீதி - தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறை மெத்தனம்

Published On 2018-09-05 10:40 GMT   |   Update On 2018-09-05 10:40 GMT
கேரளாவில் எலிக்காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடலூர்:

கனமழை கொட்டிதீர்த்த கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பலர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக 3 பாதைகளில் கேரளாவிற்கு தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போடிமெட்டு வழியாக மூணாறு பகுதிக்கும், குமுளி மலைச்சாலை வழியாக இடுக்கி மாவட்டத்திற்கும், கம்பம்மெட்டு வழியாக கட்டப்பணை பகுதிக்கும் செல்கின்றனர். தினசரி கேரளாவிற்கு தேவையான காய்கறி, பால், உணவு பொருட்கள் ஆகியவை கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் செல்கின்றனர். தினசரி தேனி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் கேரளாவிற்கு சென்று திரும்புகின்றனர்.
Tags:    

Similar News