செய்திகள்

ஆற்று மணலை கொள்ளையடிக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள் - அன்புமணி ஆவேசம்

Published On 2018-09-02 05:39 GMT   |   Update On 2018-09-02 05:39 GMT
ஆற்று மணலை கொள்ளையடிக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். #AnbumaniRamadoss #ADMK

ஆண்டிப்பட்டி:

வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற பிரசார இயக்கத்தை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

ஆறுகள் வறண்டால்தான் மணல் பரப்பில் கொள்ளையடிக்க முடியும் என்பதால் மழை பெய்யாமல் இருக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள். இதன் காரணமாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாமல் ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. வைகை அணையை நம்பியுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்ளுக்கு உயிரோட்டமாகவும் உள்ளது.

கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் வைகையில் ஆண்டுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வராமல் இருக்கும். ஆனால் தற்போது ஆண்டுக்கு ஒரு மாதத்தில் மட்டும்தான் தண்ணீரே வருகிறது.

எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள 20 நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஓடும் 36 ஆறுகளை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss #ADMK

Tags:    

Similar News