செய்திகள்

உப்பளத்தில் காப்பகத்தில் இருந்த சிறுவன் மாயம்

Published On 2018-09-01 17:24 IST   |   Update On 2018-09-01 17:24:00 IST
உப்பளத்தில் காப்பகத்தில் இருந்த சிறுவன் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிறுவனை தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை திப்புராயப்பேட்டை ராஜீவ்காந்தி நகர் நாய்பட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் வேல்முருகன் (வயது 17).

பள்ளிக்கூடத்துக்கு செல்லாத இவர், பெற்றோருக்கு கட்டுப்படாமல் சுற்றி திரிந்ததால் வேல் முருகனை அவரது பெற்றோர் உப்பளத்தில் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

ஆனால், வேல்முருகன் காப்பகத்தில் இருந்து அடிக்கடி வெளியேறி பின்னர் காப்பகத்துக்கு திரும்புவது வழக்கம்.

அதுபோல் கடந்த சில நாட் களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற வேல்முருகன் அதன் பிறகு காப்பகத்துக்கு திரும்பவில்லை. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரித்த போது அங்கு வேல்முருகன் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து காப்பக நிர்வாகி லில்லிபுஷ்பம் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான வேல்முருகனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News