செய்திகள்

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-08-26 20:30 IST   |   Update On 2018-08-26 20:30:00 IST
சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 வாலிபர்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:

சேலம் நரசோதிப்பட்டி ஏழுமலை கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). இவர் நேற்று மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஜங்சன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வரும் போது பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பெருமாள் பாக்கெட்டில் இருந்து ரூபாய் 200-யை அருகில் இருந்த வாலிபர் எடுத்து மற்றொரு வாலிபரிடம் கொடுத்தார். அதை கண்ட பயணிகள் அவர்களை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் ஒமலூர் அம்பேத்கர் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் சிரன்ஜீவி (30), சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காதர் பாஷா என்பவர் மகன் ஜாபர் அலி (31) ஆகிய இருவரையும் கைது செய்து. அவர்களிடம் இருந்து ரூ.200-யை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News