செய்திகள்

புழல் அருகே ஆட்டோ டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2018-08-26 07:02 GMT   |   Update On 2018-08-26 07:02 GMT
புழல் அருகே ஆட்டோ டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

சென்னை கொளத்தூர் திருமேனிநகர் பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது 30), ஆட்டோ டிரைவர்.

இவர் புழல் கதிர்வேடு பாலாஜிநகர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடினார். அவரது கழுத்து, மூக்கு, வாய் ஆகிய இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி புழல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிர் ஊசலாடுகிறது.

கடந்த ஆண்டு கதிர்வேடு பகுதியை சேர்ந்த அகித் என்பவரை அன்வர்ஷா அரிவாளால் வெட்டினார். அதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News