செய்திகள்

கூடலூரில் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2018-08-20 15:19 IST   |   Update On 2018-08-20 15:19:00 IST
கூடலூரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:

கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவருக்கும் அபிநயா (வயது22) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 57 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

தற்போது பிரதீப் குமாருக்கு நிரந்தர வேலை கிடைத்துள்ளது. இதனால் மேலும் 20 பவுன் தங்க நகை அவரது தாய் வீட்டில் இருந்து வாங்கி வருமாறு பிரதீப் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அபிநயாவை மிரட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் பிரதீப்குமார் மற்றும் அவரது தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News