செய்திகள்

தவளக்குப்பத்தில் சைக்கிள் மீது கார் மோதியதில் மரம் ஏறும் தொழிலாளி பலி

Published On 2018-08-19 11:04 GMT   |   Update On 2018-08-19 11:04 GMT
தவளக்குப்பத்தில் சைக்கிள் மீது கார் மோதியதில் மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.

பாகூர்:

புதுவை பூரணாங்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை தவளக்குப்பத்தில் கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது பாகூரில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று காலை 6 மணிக்கு பழனிச்சாமி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News