செய்திகள்

தொடர்ந்து செல்போனில் பேசியதால் ஆத்திரம்: மனைவி காதை அறுத்த கணவர்

Published On 2018-08-17 15:19 IST   |   Update On 2018-08-17 15:19:00 IST
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தொடர்ந்து செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் காதை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி- ஜலகண்டாபுரம் சாலையில் உள்ளது பெருமாள் கோயில் காலனி. இப்பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (40). இவர் எடப்பாடி பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்கூடத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சந்தியா(35). இவர் எடப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் இயங்கிவரும் ஓர் தனியார் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மகன் குருசர்வேஷ் (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியா வீட்டில் அதிகநேரம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதிக நேரம் செல்போனில் பேசுவதை நிறுத்தும்படி கணவர் பலமுறை கண்டித்தும் சந்தியா அதற்கு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜா, வீட்டிலிருந்து அரிவாள்மனையை எடுத்து தனது மனைவியின் காதை வெட்டினார்.

இதில் சந்தியாவிற்கு காது மற்றும் கன்னத்தில் வெட்டுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் வசிப்பவர்கள் சந்தியாவை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், முத்துராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News