செய்திகள்

சிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது

Published On 2018-08-15 05:31 GMT   |   Update On 2018-08-15 05:31 GMT
மகளை இழுத்துச்சென்ற சிறுத்தையை விறகு கட்டையால் விரட்டியடித்த கோவை முத்துமாரிக்கு சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. #IndependenceDayIndia #KalpanaChawlaAward
சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகளை வழங்கினார். இதில், தமிழக அரசின் துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவையில் வசித்து வரும் முத்துமாரிக்கு வழங்கப்பட்டது. விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய இவரது துணிவைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த அய்யப்பராஜ் மனைவி முத்துமாரி (42). இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கல்லார் எஸ்டேட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று முத்துமாரியும், அவரது மகள் சத்யாவும் வீட்டின் பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் இருந்து ஓடி வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்த முத்துமாரி பயப்படாமல் விறகு கட்டையை எடுத்து சிறுத்தையை பலமாக தாக்கி விரட்டியடித்துள்ளார். இந்த துணிச்சல் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #KalpanaChawlaAward
Tags:    

Similar News