செய்திகள்

சோம்நாத் சாட்டர்ஜி மரணம்- முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Published On 2018-08-13 07:57 GMT   |   Update On 2018-08-13 07:57 GMT
முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
சென்னை:

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

அஸ்ஸாம் மாநிலம், திஸ்பூரில் பிறந்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சோம்நாத் சட்டர்ஜி, இந்தியாவிலேயே நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சாதனை படைத்தவர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்றவர்.


அதுமட்டுமின்றி, 1996ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதினை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். சோம்நாத் சாட்டர்ஜி, மக்களவை தலைவராக ஜூன் 2004 முதல் மே 2009 வரை பதவி வகித்து, மக்களவையை திறம்பட வழிநடத்தியவர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மதிக்கப்பெற்றவர்.

சோம்நாத் சாட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
Tags:    

Similar News