செய்திகள்

டி.டி.வி. தினகரன் 19-ந்தேதி வேலூர் வருகை

Published On 2018-08-11 15:44 IST   |   Update On 2018-08-11 15:51:00 IST
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 19-ந்தேதி வேலூர் வருகிறார்.
வேலூர்:

வேலூர் மாங்காய் மண்டி அருகில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் கொணவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கட்சியின் அவைத் தலைவர் நாமக்கல் அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில்பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், மாவட்ட செயலாளர்கள் என்.ஜி.பார்த்திபன், பாலசுப்பிரமணி, கலையரசு மற்றும் ஜெயந்தி பத்மநாபன், கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பாண்டு ரங்கன், வடிவேல், முன்னால் எம்.எல்.ஏ. சந்திரசேகர், எல்.கே.எம்.பி.வாசு, தோட்டப்பாளையம் எஸ்.கே.மோகன் மற்றும் பகுதி செயலாளர்கள் கட்சி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News