செய்திகள்

சென்னிமலையில் சூறாவளி காற்றுடன் மழை

Published On 2018-08-11 05:34 GMT   |   Update On 2018-08-11 05:34 GMT
சென்னிமலையில் சூறாவளிக் காற்றால் மரம் முறிந்து ரோட்டோரம் விழுந்தது. இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Rain

சென்னிமலை:

சென்னிமலையில் மழை பெய்தபோது வீசிய சூறாவளிக் காற்றில் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதில் மின் கம்பி அறுந்தது. சில இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று மாலையில் சென்னிமலை டவுன் மற்றும் சுற்று வட்டாரத்தில் திடீரென மழை பெய்தது . அப்போது கடுமையான சூறாவளிக் காற்று வீசியது.

இதனால் தினசரி மார்க்கெட் எதிரில் உள்ள இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து ரோட்டோரம் விழுந்தது. ஈங்கூர் ரோட்டில் பத்திரபதிவு அலுவலகம் முன் இருந்த பெரிய மரத்தின் கிளையும் முறிந்து ரோட்டில் விழுந்தது.

இதனால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னிமலை அடுத்துள்ள முருங்கக்காடு பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் அங்குள்ள ஒரு தகர செட்டின் மேற்கூரை காற்றில் பறந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் மின் கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள இரும்பு தகடுகள் மற்றும் சில மின் சாதனங்கள் சேதம் அடைந்தன. அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் கம்பிகள் அறுந்து தொங்கியது . இதனால் மின் தடை ஏற்பட்டு அப்பகுதியேகும் மிருட்டானது.

இதனால் பொதுமக்கள் இரவில் இருட்டில் தவித்தனர். மின்வாரிய பணியாளர்கள் அவ்விடத்துக்கு இன்று வந்து பார்த்து சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News