செய்திகள்
முனியசாமி

கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு - உண்ணாவிரதமிருந்த தி.மு.க. தொண்டர் உயிரிழப்பு

Published On 2018-08-07 11:27 IST   |   Update On 2018-08-07 11:27:00 IST
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் மிகுந்த மனவேதனையில் சாப்பிடாமல் இருந்த திமுக தொண்டர் முனியசாமி உயிரிழந்தார்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள உழக்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 82), விவசாயி. இவர் கடந்த 1968-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.

தி.மு.க.வில் பிரதிநிதி, கிளைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அதிக பாசம் கொண்டவர். கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என கேள்விப்பட்டதும் முனியசாமி அதிர்ச்சியடைந்தார்.

கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் முனியசாமி மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்த சோகத்தில் அவர் சாப்பிட மறுத்து விட்டார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முனியசாமி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

Tags:    

Similar News