செய்திகள்
அரச்சலூர் அருகே துப்பாக்கி வெடித்து விவசாயி பலி?- போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே துப்பாக்கி வெடித்து விவசாயி பலியானாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த பனங்காட்டு வலசு கிளை வாய்க்கால் அருகே ஒருவர் இடது கையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவரது அருகில் ஒரு நாட்டு துப்பாக்கியும், மோட்டார் சைக்கிளும் கிடந்தன. இது தொடர்பாக அரச்சலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் அரச்சலூர் அடுத்த முள்ளாம்பரப்பு அருகே உள்ள நல்லாந்தொழுவை சேர்ந்த குமரவேல் என்கிற குமரேசன் (வயது 38) என்பது தெரிய வந்தது.
விவசாயியான அவரது அருகில் கிடந்தது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
அவர் அடிக்கடி நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு செல்வது வழக்கம். எனவே அவ்வாறு சென்ற போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து அவரது இடது கையில் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது பற்றி போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
குமரவேல் பனங்காட்டு வலசு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று முன் தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் அவரது இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
எனினும் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கி வந்துள்ளார். அப்போது கிளை வாய்க்கால் அருகே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் யாரும் பார்க்காமல் அதிக ரத்தம் வெளியேறி அவர் இறந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குமரவேல் உண்மையில் துப்பாக்கி வெடித்துதான் இறந்தாரா? அவரது அருகில் கிடந்தது அவர் பயன்படுத்திய துப்பாக்கிதானா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.