செய்திகள்

சாணார்பட்டி அருகே இரவில் மயில்களை வேட்டையாடும் கும்பல்

Published On 2018-08-03 17:09 GMT   |   Update On 2018-08-03 17:09 GMT
சாணார்பட்டி அருகே பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மயில்களை வேட்டையாடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே உள்ள ராமன்செட்டியபட்டி, கொண்டன்செட்டியபட்டி, கோணப்பட்டி ஆகிய கிராமங்களில் மா விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாந் தோப்புகளில் மயில்கள் இரை தேடி இளைப்பாறி வருகின்றன.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் மயில்களை சுட்டு வேட்டையாடி வருகின்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பொதுமக்கள் எழுந்து வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி விடுகின்றனர்.

ஆடி மாதம் என்றாலே வன விலங்குகள் வேட்டையாடப் படுவது தொடங்கி விடும். இறைச்சிக்காக விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர். நாட்டின் தேசிய பறவையான மயிலை கூட விட்டு விடாமல் இக்கும்பல் வேட்டையாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News