செய்திகள்

வடகாடு மலைப்பகுதியில் ரூ.1.5 கோடியில் தடுப்பு சுவர், சிமெண்ட் தளம் அமைக்கும் பணி

Published On 2018-07-30 15:31 IST   |   Update On 2018-07-30 15:31:00 IST
வடகாடு மலைப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பில் 13 தடுப்புச்சுவர்கள், வி. வடிவ சிமெண்ட் தரை தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புரம் வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம், கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

கே.சி.பட்டி முதல் ஒட்டன்சத்திரம் வரை மாவட்ட இதர சாலைகள் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் 13 தடுப்புச்சுவர்களும், வி. வடிவ சிமெண்ட் தரைதளமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் மூலம் மலைப்பகுதிக்கு செல்லும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். மேலும் மழை காலங்களில் மலைப்பகுதியிலிருந்து வரும் தண்ணீர் தார்சாலையை பாதிக்காத வண்ணம் வி. வடிவ சிமெண்ட் தரைதளம் அமைக்கப்படுவதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News