செய்திகள்

மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைப்பார்- இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

Published On 2018-07-30 15:22 IST   |   Update On 2018-07-30 15:22:00 IST
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார் என்று இந்திய கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா குற்றம் சாட்டியுள்ளார். #pmmodi #indiacommunist

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜீஸ்பாஷா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் 4 ஆண்டுகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிபாளையத்தில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்திக்கும். இதை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்துடன் மாநிலங்களுக்கு நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் உடனிருந்தனர். #pmmodi #indiacommunist

Tags:    

Similar News