செய்திகள்

ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னம் - தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

Published On 2018-07-22 12:26 IST   |   Update On 2018-07-22 12:26:00 IST
ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #Storm #IndianWeatherCenter

சென்னை:

வடக்கு ஒடிசா கடற்கரை மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதியையொட்டி உள்ள வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.

இது இன்று காலை 5.30 மணி அளவில் வடக்கு ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் நோக்கி நகர்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக வலு இழக்க தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Storm #IndianWeatherCenter

Tags:    

Similar News