செய்திகள்

திருவையாறு அருகே வழிப்பறி திட்டம் தீட்டிய 6 வாலிபர்கள் கைது

Published On 2018-07-19 14:30 GMT   |   Update On 2018-07-19 14:30 GMT
திருவையாறு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சதி திட்டம் தீட்டிய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே பொன்னாவரை 4 கால் மண்டபம் அருகில் சம்பவத்தன்று அதிகாலை திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்க்கு இடமான வகையில் சிவப்பு கார் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அதன் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் 6 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அரியலூர்-தஞ்சை செல்லும் லாரிகளை மறித்து வழிப்பறி செய்ய சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. 

உடனடியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் 6 பேரையும் பிடித்து திருவையாறு போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் பொன்னாவரை மேலத்தெரு ராஜேந்திரன் மகன் அசோக்குமார் (வயது26), அதே ஊர் காளியம்மன் கோவில் தெரு அமர்சிங் மகன் விஜய்(22), திருவையாறு ஸ்ரீராம் நகர் ராமானுஜம் மகன் சக்திகணேஷ்(27), பாவா அக்ரஹாரம் சுந்தரமூர்த்தி மகன் பிரசாந்(26), மேலவீதி திருஞானசம்பந்த மூர்த்தி மகன் நிதிஸ்(எ) கலியபெருமாள்(23), ஆக்கிநாதபுரம் உத்திராபதி மகன் சுரேந்தர்(25) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அதில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News