செய்திகள்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி நிதி உதவி

Published On 2018-07-19 14:51 IST   |   Update On 2018-07-19 14:51:00 IST
கலைஞர் கருணாநிதி அறக்கட்டணை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று நிதியாக வழங்கப்பட்டது.
சென்னை:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2018 ஜூன் மாதத்துக்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று வழங்கப்பட்டது.

நிதிபெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News