செய்திகள்

அலங்காநல்லூரில் ரூ.3.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

Published On 2018-07-18 09:28 GMT   |   Update On 2018-07-18 09:28 GMT
அலங்காநல்லூரில் ரூ.3.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அலங்கநல்லூர்:

அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அளவிலான 650 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் ரூ.3கோடியே 50 லட்சம் மதிப்பில் வழங்கும் விழா நடந்தது.

மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் பார்த்தீபன், முன்னிலை வகித்தனர்.

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவிகள், பசுமைவீடு திட்டங்கள், மற்றும் தோட்டகலை மூலம் மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசன், ஜெயசந்திரமணியன், மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய்துறை அலுவலர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சரும், எம்,எல்,ஏவும், சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டிவந்தனர். இந்த ஊர்வலம் அழகர் கோவிலில் இருந்து தொடங்கி அலங்காநல்லூர் வழியாக அய்யங்கோட்டை சென்றடைந்தது. இதில் 1500 சைக்கிள்களில் அ.தி.மு.க.வினர் அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

அலங்காநல்லூர் கேட்டு கடையில் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News