செய்திகள்

கோவையில் இருந்து பஸ்சில் கடத்திய ரூ.15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2018-07-13 10:42 GMT   |   Update On 2018-07-13 10:42 GMT
கோவையில் இருந்து பஸ்சில் கடத்திய ரூ.15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர். #Hawalamoneyseized

கோவை:

கோவையில் இருந்து நேற்று தனியார் பஸ் கொச்சி சாலையில் சென்றது. அப்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் இருந்து வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படி வாலிபர் இருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்சென்னையை சேர்ந்த அப்துல்காதர் (வயது 40) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் ஹவாலா பணம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்துல்காதரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை பல கோடி ஹவாலா பணத்தை சென்னனையில் இருந்து கொச்சிக்கு கடத்தியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோன்று வாளையார் அடுத்த குருடிக்காடு அருகே வாகன சோதனை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து திருச்சூர் வந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் நடத்திய சோதனையில் திருச்சூரை சேர்ந்த ஜேம்ஸ் ஜாய் (43) என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் ஹவாலா பணம் மற்றும் 7 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜேம்ஸ் ஜாய்யும் போலீசார் கைது செய்தனர். #Hawalamoneyseized

Tags:    

Similar News