செய்திகள்

காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு - உதவி பேராசிரியர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-07-12 15:48 IST   |   Update On 2018-07-12 15:48:00 IST
காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உதவி பேராசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் எஸ்வின் (வயது 27). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக எஸ்வின் மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட எஸ்வினின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News