செய்திகள்

பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை - புதிய ஆணையாளர் தகவல்

Published On 2018-07-10 15:03 GMT   |   Update On 2018-07-10 15:03 GMT
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற கொண்ட ரமேஷ், பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்த எச்.ரமேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ வேண்டாம். அதற்கு பதிலாக துணிப்பைகள் மற்றும் காகித பைகளை பயன்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News