செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடமுடியாது- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-07-02 08:07 GMT   |   Update On 2018-07-02 08:07 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #SupremeCourt #Koodankulam
சென்னை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை. அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. #SupremeCourt #Koodankulam
Tags:    

Similar News