செய்திகள்

காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-06-19 08:30 GMT   |   Update On 2018-06-19 08:30 GMT
வளர்ந்து வரும் நகரமான காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி:

வளர்ந்து வரும் நகரமான காரியாபட்டியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராம மக்கள் தினமும் பள்ளி கல்லூரி மற்றும் பிற அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தாலுகா அலுவலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் உள்ளன.

ஆனால் தீயணைப்பு நிலையம் மட்டும் காரியாபட்டியில் இல்லை. காரியாபட்டியைச் சுற்றி தீப்பெட்டி தொழிற்சாலை, பாம்பாட்டி அருகே பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்தப் பகுதியில் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் அருப்புக்கோட்டை, திருச்சுழியிலிருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டிய நிலை உள்ளது.

அங்கிருந்து வருவதற்குள் பெரும் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது எனவே காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News