செய்திகள்

வீரப்பன்சத்திரத்தில் இன்று சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-18 16:39 GMT   |   Update On 2018-06-18 16:39 GMT
28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று பர்கூர் மலைப்பகுதி மற்றும் காளிமலை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் மாநில தலைவர் வரதராஜு தலைமையில் திரண்டனர். மொத்தம் 800-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ்கள் தரவில்லை. இதனால் எங்களால் அரசு சலுகை, மானியம் என எதுவும் பெற முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறும் போது, ‘‘28 ஆண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.

Tags:    

Similar News