செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீரை திறந்துவிட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Published On 2018-06-17 10:28 GMT   |   Update On 2018-06-17 10:28 GMT
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவிட்டார். #Panneerselvam #Mullaperiyaerdam
குமுளி:

கேரள மாநிலம் குமுளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக விவசாய சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும் இன்று திறந்து விடப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து விட்டார்.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறையினர் கூறுகையில், விவசாயம் மற்றும் குடிநீருக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி தமிழக அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.
#Panneerselvam #Mullaperiyaerdam
Tags:    

Similar News