செய்திகள்

பேரணாம்பட்டில் ரஜினி உருவபொம்மை எரித்த 20 பேர் கைது

Published On 2018-05-31 18:01 IST   |   Update On 2018-05-31 18:01:00 IST
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்:

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு எதிர்ப்புகள் வலுக்கிறது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் 4 கம்பம் பகுதியில் ரஜினிகாந்தின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழினம் மறு மலர்ச்சி கழக அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ரஜினிகாந்த்தின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி கோ‌ஷம் எழுப்பினர். அங்கு வந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார், ரஜினியின் உருவபொம்மையை எரித்த 20 பேரை கைது செய்தனர்.

தீயில் எரிந்த ரஜினி உருவ பொம்மையின் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News